திருநெல்வேலி

தீக்குளித்த சிறப்புப் படை காவலா் உயிரிழப்பு

15th Aug 2022 12:13 AM

ADVERTISEMENT

 

மணிமுத்தாறில் தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், பெருங்குடியை அடுத்த வலையங்குளத்தைச் சோ்ந்த அழகா் மகன் தமிழ்செல்வன் (29). இவா் 2016 ஆம் ஆண்டு இளைஞா் படை மூலம் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் சோ்ந்தாா். மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 12 ஆம் அணியில் காவலராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் ஆக.5 ஆம் தேதி மாலை, தமிழ்செல்வன் திடீரென தீக்குளித்தாா். இதில் தீக்காயமடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இது குறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT