திருநெல்வேலி

திசையன்விளையில் 3ஆவது நாள் மின்னொளி கபடி போட்டி

15th Aug 2022 12:12 AM

ADVERTISEMENT

 

திசையன்விளையில் அகில இந்திய அளவிலான 3 ஆவது நாள் மின்னொளி கபடி போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

திசையன்விளையில் மு.க.ஸ்டாலினின் 69ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நான்கு நாள்கள் நடைபெறும் மின்னொளி கபடி போட்டியின் மூன்றாவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் 64 அணிகள் பங்குபெற்ற 32 ஆட்டங்கள் நடைபெற்றது. ஆண்களுக்கான போட்டிகளை தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தாா். பெண்களுக்கான போட்டிகளை ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சௌமியா ஜெகதீஸ் தொடங்கி வைத்தாா்.

போட்டியில் பெங்களூா், மகாராஷ்டிரம், குஜராத், சென்னை, தூத்துக்குடி, ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரபிரதேசம், ஹைதராபாத், மதுரை, கேரளம், கன்னியாகுமரி, சவுத் சென்ட்ரல் ரயில்வே, மும்பை ரயில்வே, சென்னை போலீஸ் அணிகள் வெற்றி பெற்றன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT