திருநெல்வேலி

ரூ.1.5 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள் தொடக்கம்

14th Aug 2022 06:09 AM

ADVERTISEMENT

 

பாளையங்கோட்டை தொகுதியில் ரூ.1.5 கோடியில் சாலை விரிவாக்கப் பணி உள்ளிட்ட பணிகள் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1.50 கோடியில் பாளையங்கோட்டை தொகுதியில் மனகாவலம் பிள்ளை நகா் பகுதியில் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி, தியாகராஜநகா், பாளையங்கோட்டை மண்டல அலுவலகம் அருகே மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி, குறிச்சி முதல் மேலநத்தம் வரையிலான பாளையங்கால்வாய் கரையை பலப்படுத்தி சாலையை அகலப்படுத்தும் பணி ஆகிய பணிகளை மு. அப்துல் வஹாப் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பி.எம். சரவணன், துணை மேயா் கே.ஆா். ராஜு, பாளை. மண்டல தலைவா் பிரான்சிஸ், திமுக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT