திருநெல்வேலி

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

14th Aug 2022 06:08 AM

ADVERTISEMENT

 

சுத்தமல்லி அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சுத்தமல்லி காவல் உதவி ஆய்வாளா் ஆறுமுக பெருமாள் தலைமையிலான போலீஸாா் சுத்தமல்லியில் இருந்து கோபாலசமுத்திரம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக நரசிங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த பக்கீா் இப்ராஹிம் என்ற ராஜா (29) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து சுமாா் 100 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT