திருநெல்வேலி

வீடுகள், வணிக வளாகங்களில் தேசியக் கொடி ஏற்றம்

14th Aug 2022 06:08 AM

ADVERTISEMENT

 

75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி சந்திப்பு பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், கோயில்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

75-ஆவது சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாயொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் மூன்று நாள்கள் தேசியக் கொடி ஏற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், திருநெல்வேலி சந்திப்பு சி.என். கிராமம் பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் வணிக வளாகங்களிலும், வீதிகளிலும் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினா். இதேபோல், சி.என். கிராமம் பகுதியில் அமைந்துள்ள ராஜகோபால சுவாமி திருக்கோயிலிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT