திருநெல்வேலி

ஆக.15இல் மதுக்கடைகள் மூடல்

13th Aug 2022 12:17 AM

ADVERTISEMENT

சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து மதுபானக் கடைகளும் திங்கள்கிழமை (ஆக.15) மூடப்பட்டிருக்கும் என ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 75-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகள், மதுபானகூடங்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

சுதந்திர தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT