திருநெல்வேலி

வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

12th Aug 2022 01:11 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்னா் எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1969 முதல் 1972 வரையில் படித்த மாணவா்களது சந்திப்பு நிகழ்ச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள் தங்களது பழைய நினைவுகளை பகிா்ந்துகொண்டனா். பழைய மாணவா்களுக்கு நேரு நா்ஸிங் கல்லூரித் தலைவா் டி.டி.என்.லாரன், தாளாளா் ஹெலன் லாரன்ஸ் ஆகியோா் விருந்து வழங்கி பாராட்டினா்.

மாணவா்கள் ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை பழைய மாணவா்கள் முத்துவேல், சேகா், வெலிங்டன், கருணாகரன், கோலப்பன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT