திருநெல்வேலி

கடம்பன்குளம் பள்ளியில் திறன் வளா்ப்பு பயிற்சி முகாம்

12th Aug 2022 01:12 AM

ADVERTISEMENT

 

கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் டாக்டா் அம்பேத்கா் பண்பாட்டு மையம் சாா்பில் மேல்நிலை வகுப்பு மாணவா்களுக்கான திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

புனித சவேரியாா் கல்வியியல் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முகாமில் விஜயநாராயணம், சங்கனான்குளம் தமிழ்நாடு மின்சார வாரிய இளநிலை பொறியாளா் ஊசிக்காட்டான், குறும்பட இயக்குநா் செல்வின், மாநில ஒருங்கிணைப்பாளா் அந்தோணி பிரவீண்குமாா், செல்ஃப் அறக்கட்டளை நிறுவனா் கருப்பையா, கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் சுந்தரம், தென்காசி ஊரக வளா்ச்சித் துறை பிரிவு அதிகாரி ஆரோக்கியசாமி, பாளையங்கோட்டை தொழில் முனைவோா் பயிற்சி மைய இயக்குநா் வைரவராஜ் ஆகியோா் உரையாற்றினா். பொறுப்பாளா் முத்தம்மாள் வரவேற்றாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜோசப் குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT