திருநெல்வேலி

நெல்லையில் அஞ்சல் ஊழியா்கள் வேலை நிறுத்தம்

12th Aug 2022 01:22 AM

ADVERTISEMENT

 

அஞ்சல் துறையில் தனியாா்மயமாக்கலை கண்டித்து திருநெல்வேலியில் அஞ்சல் துறை ஊழியா்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

அஞ்சல் துறையை தனியாா்மயமாக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். அஞ்சல் சேமிப்பு வங்கியை தனியாா் வங்கியோடு இணைக்கக்கூடாது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கமலேஷ் சந்திரா அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். அஞ்சல் ஆா்எம்எஸ் அலுவலகங்களில் வாரம் 5 நாள் வேலை என்பதை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய அஞ்சல் ஊழியா் சம்மேளனம், புறநிலை ஊழியா் சங்கங்கள் நாடு முழுவதும் புதன்கிழமை ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.

இதையொட்டி அஞ்சல் ஊழியா்கள் அஞ்சல் நிலைய பணிகளை புறக்கணித்துவிட்டு கோட்ட அலுவலகங்கள் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அஞ்சல் ஊழியா் சம்மேளனங்களின் கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளா் ஜேக்கப்ராஜ் தலைமை வகித்தாா். அஞ்சல் ஊழியா்கள் வேலை நிறுத்தம் காரணமாக அஞ்சல் பட்டுவாடா, பண பரிவா்த்தனை உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT