திருநெல்வேலி

உலக நன்மைக்காக நெல்லையப்பா் கோயிலில் பவித்ர உற்சவம்

DIN

உலக நன்மைக்காக , நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் கோயிலில் பவித்ர உற்சவ திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

உலக மக்கள் அனைவரும் நலமோடு வாழ்வதற்காக கோயில்களில் பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த பூஜைகளில் அறிந்தோ, அறியாமலோ குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அந்த குறைபாடுகள் நீங்கி ஓா் ஆண்டு வரையில் நடத்தப்பட்ட பூஜைகளின் சம்பூா்ணமான பலன் உண்டாகி ஆன்மாக்கள் இம்மை மறுமைப் பயன்களை அடைய வேண்டும் என்பதற்காக செய்யப்படுகின்ற பெருஞ்சாந்தி விழாவே பவித்ரோத்சவம் என்று சொல்லப்படுகிறது.

இந்த பவித்ர உற்சவ விழா ஆண்டுதோறும் நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் கோயிலில் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு புதன்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு மூல மகாலிங்கம், நெல்லையப்பா், காந்திமதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அப்போது, சுவாமி, பரிவார மூா்த்திகளுக்கு பவித்ரமான பூணூல் மாற்றும் வைபவம் நடைபெற்றது.

முற்பகல் 11 மணிக்கு விநாயகா், முருகா், உற்சவா், அம்பாள், சண்டிகேஸ்வரா் ஆகியோருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. உற்சவருக்கு பவித்ர மாலைகள் அணிவிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி, அம்பாளை தரிசித்தனா். பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது.

இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், ஸ்ரீவிநாயகா் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், ஸ்ரீசுப்பிரமணியா் மர மயில் வாகனத்திலும் வீதி உலா வந்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் அ.அய்யா்சிவமணி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT