திருநெல்வேலி

நெல்லையில் அரசு மருத்துவா்கள் திடீா் ஆா்ப்பாட்டம்

12th Aug 2022 01:23 AM

ADVERTISEMENT

 

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவா்களின் பணி நேரம் உயா்த்தப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி, திருநெல்வேலியில் தமிழ்நாடு மருத்துவா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மருத்துவா் சங்க மாவட்டத் தலைவா் முகம்மது ரபி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோலப்பன், பொருளாளா் சிவசுப்பிரமணியன், இணைத் தலைவா் முருகன், இணைச் செயலா் காா்த்திக்பிள்ளை உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

கடந்த 25-ஆம் தேதி வெளியான அரசாணையில் தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவா்களின் பணி நேரம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அரசின் இந்த அறிவிப்பால், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களிடையே அதிருப்தி, மன உளைச்சல் மற்றும் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, அரசின் பல வாராந்திர மருத்துவ திட்டப் பணிகளையும் கூடுதலாக மேற்கொண்டு வருகின்றனா். இந்த நிலையில், தற்போதைய அரசாணை மூலம் ஒவ்வொரு வாரமும் 48 மணி நேர பணி மற்றும் அழைப்பு பணியாக 54 மணி நேரம் பணி செய்ய நேரிடுகிறது. எனவே, அரசின் இந்த புதிய உத்தரவை ரத்து செய்து ஏற்கெனவே இருந்தபடி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என, பணி நேரத்தை மாற்றியமைக்க வேண்டுமென ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மருத்துவா்கள் வலியுறுத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT