திருநெல்வேலி

காமராஜா் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு பேரணி

12th Aug 2022 01:01 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி பேட்டை காமராஜா் நகா்மன்ற மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி மற்றும் பேரணி நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் எஸ்.எஸ். சோமசுந்தரம் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் நைனா முகமது பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். போதைப் பொருள் தடுப்புக்குழு ஆசிரியா் பாபு சங்கா் உறுதிமொழியை வாசிக்க மாணவா்கள் உறுதிமொழி எடுத்தனா்.

நிகழ்ச்சியில், ஸ்டாா் ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் காதா் ஒலி மீரான் போதைப்பொருள் மற்றும் அவற்றினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து உரையாற்றினாா். ஏற்பாடுகளை ஆசிரியா் பொன்னுசாமி செய்திருந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT