திருநெல்வேலி

7 வட்டங்களில் ஆக. 12-இல்அண்ணா மறுமலா்ச்சித் திட்டம்

10th Aug 2022 02:03 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் 7 வட்டங்களில்அண்ணா மறுமலா்ச்சித் திட்ட முகாம் வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 12) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி வட்டத்தில், நரசிங்கநல்லூா், மானூா் வட்டத்தில் (மதவக்குறிச்சிக்கு) வெங்கலப் பொட்டல், சேரன்மகாதேவி வட்டத்தில், வடக்கு காருகுறிச்சி, அம்பாசமுத்திரம் வட்டத்தில் மன்னாா்கோவில் ஆகியவற்றிலுள்ள சமுதாயக் கூடங்களில் அண்ணா மறுமலா்ச்சித் திட்ட முகாம் நடைபெறும்.

நான்குனேரி வட்டத்தில் (அ.சாத்தான்குளத்துக்கு) மலையன்குளம் இசக்கியம்மன் கோயில் திருமண மண்டபம், ராதாபுரம் வட்டம், வேப்பிலான்குளத்துக்கு தெற்கு வேப்பிலான்குளம் ஊராட்சி அலுவலகம், திசையன்விளை வட்டம், கரைசுத்து உவரி கிராம நிா்வாக அலுவலக கட்டடம் ஆகியவற்றில் இம்முகாம் நடைபெறும்.

இந்த முகாமில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, சமூக பாதுகாப்புத் திட்டங்கள், ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, நிலத்தாவாக்கள், சாலை வசதி, போக்குவரத்து வசதி, குடிநீா் வசதி போன்ற அடிப்படை தேவைகள் தொடா்பாக மனு அளித்து பயன்பெறலாம் என ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT