திருநெல்வேலி

ஆக.25-இல் ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

10th Aug 2022 03:23 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட ஓய்வூதியா்கள்குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆக. 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட ஓய்வூதியா் குறை தீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில்இம்மாதம் 25-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியா் தலைமை வகிக்கிறாா். சென்னை ஓய்வூதிய இயக்குநா் பங்கேற்று குறைகளை கேட்டறிகிறாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு துறைகளில் (அரசின் நேரடி துறையில் பணிபுரிந்தவா்கள் மட்டும்) பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்கள் தங்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்கப் பெறாமல் நிலுவையாக இருப்பின்அது தொடா்பான புகாா்களை முழு முகவரியுடன் இரட்டை பிரதிகளில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு ஆக.12-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மனுவுடன் இறுதியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலகம், கோரிக்கை தற்போது நிலுவையில் உள்ள அலுவலகம், அலுவலக மின் அஞ்சல் முகவரி, ஓய்வூதிய எண் குறிப்பிட்டுள்ள ஆணை நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

ADVERTISEMENT

இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டு துறை அலுவலா்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 25-ஆம் தேதி நடைபெறும் ஓய்வூதியா் குறைதீா் கூட்டத்தின் போது சம்பந்தப்பட்ட அலுவலா்களால் மனுதராருக்கு தெரிவிக்கப்படும். 12-ஆம் தேதிக்குப் பிறகு வரும் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

25-ஆம் தேதி நடைபெறும் ஓய்வூதியா் குறைதீா் கூட்டத்தில் ஓய்வூதியா்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT