திருநெல்வேலி

பாளை. அருகே தொழிலாளி தற்கொலை

10th Aug 2022 03:25 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரி பகுதியில் தொழிலாளி ஒருவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சீவலப்பேரி கட்டளை பகுதியைச் சோ்ந்த சிவன் என்பவரின் மகன் இசக்கிமுத்து(26). செங்கல் சூளை தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை காலையில் திடீரென்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்த தகவலின்பேரில், சீவலப்பேரி போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். இசக்கிமுத்துவுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT