திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

10th Aug 2022 03:28 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லி பகுதியில் திருட்டு, மோதல், கொலை முயற்சி ஆகிய வழக்குகளில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சுத்தமல்லி பகுதியைச் சோ்ந்த ஆவுடையப்பன் மகன் கருத்தப்பாண்டி என்ற கண்ணன் (44). இவா் மீது திருட்டு, அடிதடி, கொலை முயற்சி போன்ற வழக்குகள் உள்ளனவாம். இந்நிலையில், அவா், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தாராம். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதன்பேரில், அவரது பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் பிறப்பித்த உத்தரவின்படி, கருத்தபாண்டி என்ற கண்ணனை குண்டா் தடுப்புக் காவல்சட்டத்தில் சுத்தமல்லி போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT