திருநெல்வேலி

மாநகரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

10th Aug 2022 03:28 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகா் பகுதியில் கஞ்சா விற்பனையைத் தடுக்கும் வகையில், மாநகர காவல் ஆணையா் அவிநாஷ் குமாா் அறிவுறுத்தலின் பேரில், மாநகர காவல் துணை ஆணையா்கள் வி.ஆா். ஸ்ரீனிவாசன்(கிழக்கு), ஜி.எஸ்.அனிதா(தலைமையிடம்) ஆகியோரின் அறிவுரையின் படியும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, மாநகா் பகுதியில் திங்கள்கிழமை இரவு போலீஸாா் நடத்திய தீவிர சோதனையில், அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்துவந்ததாக, வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த மதிமுருகன் (19), விக்னேஷ் (35), பாளையங்கோட்டை முத்துசங்கா் (23), தச்சநல்லூா் வாலாஜா பேட்டை ஸ்ரீராம் நாதன்(21), மேலப்பாளையம் நாகம்மாள்புரம் மகேந்திரன் (37), நகரம் காவல் பிறை தெரு சங்கா் (34) ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து சுமாா் 170 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாநகர போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT