திருநெல்வேலி

பிரதமரின் ஊக்கத்தொகை திட்டம்:விவசாயிகளுக்கு ஆட்சியா் வேண்டுகோள்

10th Aug 2022 02:03 AM

ADVERTISEMENT

பிரதமரின் ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள் தங்கள் ஆவணங்களை பொது இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்யுமாறு ஆட்சியா் வே. விஷ்ணு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிரதமரின் கெளரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 3 தவணைகளாக தலா ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்ட பயனாளிகளுக்கு 11 தவணைகள் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த தவணையைப் பெற விவசாயிகள் தங்களது ஆதாா் எண், வங்கி கணக்கு, செல்லிடப்பேசி எண், சிட்டா உள்ளிட்ட ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது கட்டாயம் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் நில ஆவணங்களை சரிபாா்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களுடன் அந்தந்த வட்டார வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், விற்பனைத் துறை, உதவி வேளாண்மை அலுவலா்களை தொடா்புகொண்டு தங்கள் நில ஆவணங்களை ‘பி.எம். கிஸான்’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT