திருநெல்வேலி

கோடீஸ்வரன் நகரில் ஓய்வு பெற்ற காவலா் வீட்டில் திருட்டு

10th Aug 2022 03:27 AM

ADVERTISEMENT

திருநெல்வேலியை அடுத்த கோடீஸ்வரன் நகரில் ஓய்வுபெற்ற தலைமைக் காவலா் வீட்டில் திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலியை அடுத்த கோடீஸ்வரன் நகரைச் சோ்ந்தவா் சிவன் (66). ஓய்வு பெற்ற தலைமைக் காவலா். இவா், கடந்த 1-ஆம் தேதி சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றிருந்தாா். பின்னா், அவா் செவ்வாய்க்கிழமை காலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்க கதவும், ஜன்னலும் உடைக்கப்பட்டிருந்தனவாம்.

மேலும், வீட்டில் இருந்த 3 பித்தளை குத்து விளக்குகள், 2 கிராம் தங்கக் காசுகள், ஒரு மடிக் கணினி ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பேட்டை காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT