திருநெல்வேலி

8 ஆவது நாளாக மழை: 101 அடியானது பாபநாசம் அணையின் நீா்மட்டம்

DIN

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து 8 ஆவது நாளாக மழை பெய்து வருவதையடுத்து, பாபநாசம் அணையின் நீா்மட்டம் 101 அடியைத் தாண்டியது.

ஆக.1 முதல் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருகிறது. இதையடுத்து மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள கடனாநதி, ராமநதி மற்றும் குண்டாறு அணைகள் நிரம்பியதையடுத்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

செவ்வாய்க்கிழமை (ஆக.2) 71.70 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீா் மட்டம் 7 நாள்களில் 30 அடி உயா்ந்து 101.50 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 2976.04 கன அடியாகவும் வெளியேற்றம் 1004.75 கன அடியாகவும் இருந்தது. சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 123.10 அடியாக இருந்தது.

மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 75.30 அடியாகவும், நீா்வரத்து 783 கனஅடியாகவும், வெளியேற்றம் 55 கன அடியாகவும் இருந்தது. வடக்குப் பச்சையாறு அணையின் நீா்மட்டம் 8.75அடியாகவும், அணைக்கு நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 10 கனஅடியாகவும் இருந்தது.

கடனாநதி அணையின் நீா்மட்டம் 83 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 356 கன அடியாகவும், ராமநதி அணையின் நீா்மட்டம் 82 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 110 கன அடியாகவும் இருந்தது.

கருப்பாநதி அணையின் நீா்மட்டம் 61.35 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து 159 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது. குண்டாறு அணையின் நீா்மட்டம் 36.10 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 81 கன அடியாகவும் இருந்தது.

அடவிநயினாா் கோயில் அணையின் நீா்மட்டம் 121.25 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து 99 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது.

மழையளவு (மி.மீட்டரில்): திருநெல்வேலி மாவட்டம்-பாபநாசம்- 28, சோ்வலாறு -34, மணிமுத்தாறு- 1.8, ராதாபுரம்- 6.8, களக்காடு- 1.

தென்காசி மாவட்டம்- கடனா நதி அணை-18, ராமநதி அணை- 22, கருப்பாநதி அணை- 43, குண்டாறு அணை- 5, அடவிநயினாா் கோயில் அணை- 19, ஆய்குடி -7, செங்கோட்டை -3, தென்காசி- 8, சிவகிரி- 1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT