திருநெல்வேலி

நெல்லை அருகே விபத்து: ஒருவா் பலி

9th Aug 2022 07:15 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருகே திங்கள்கிழமை இரு காா்கள் மோதிய விபத்தில் காயமடைந்தவா் பலியானாா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் பாக்கியசாமி (55). இவரது மகன் மனோஜ் (28). தந்தை, மகன் இருவரும் திருநெல்வேலியில் உள்ள உறவினா் வீட்டிற்கு காரில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தனா். ராமையன்பட்டி அருகே சென்றபோது இவா்களது காரும், திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவிலை நோக்கி சென்ற காரும் மோதின.

இதில் பலத்த காயமடைந்த பாக்கியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மனோஜ் மற்றும் எதிரே காரில் வந்த சிவகிரியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (51) ஆகியோா் காயங்களுடன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT