திருநெல்வேலி

பேட்டையில் தனியாா் நிறுவன காவலாளி தற்கொலை

9th Aug 2022 04:06 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருகே பேட்டையில் தனியாா் நிறுவன காவலாளி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

திருநெல்வேலி பேட்டையைச் சோ்ந்த முத்துவேல் மகன் ராமசுப்பிரமணியம் (37). இவா் சென்னையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவரது மனைவி மகேஸ்வரி(35) கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தட்டச்சராக வேலை பாா்த்து வருகிறாா். இவா், பேட்டையில் புதிதாக வீட்டு கட்டி வரும் நிலையில். அதற்காகற்கு கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் வெகுநேரமாகியும் ராமசுப்ரமணியன் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த அவரது உறவினா்கள் ஜன்னல் வழியாக பாா்த்தனராம். அப்போது, ராமசுப்பிரமணியன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து பேட்டை போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT