திருநெல்வேலி

முக்கூடலில் சேவாபாரதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

9th Aug 2022 02:42 AM

ADVERTISEMENT

சேவாபாரதி அமைப்பின் தென்தமிழகத்திலுள்ள ஒன்றிய பொறுப்பாளா்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் முக்கூடலில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சேவாபாரதி அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினா் ஆதிமூலம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வீரராகவன், மாவட்ட துணைத் தலைவா் கண்ணன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் மதுசூதனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அமைப்புசாரா மாவட்டத் தலைவா்கள், மானூா், பாப்பாக்குடி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, வள்ளியூா், ராதாபுரம், திருநெல்வேலி நகா், புகா் பகுதியைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், ஆக.14ஆம் தேதி ஊா்க்காடு திருகோட்டியப்பா் கோயிலில் நடைபெறவுள்ள 208 திருவிளக்கு பூஜை, செப்.9ஆம் தேதி திருப்புடைமருதூா் அருள்மிகு நாறும்பூநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெறவுள்ள 1008 திருவிளக்கு பூஜைகள் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அமைப்பின் முக்கூடல் நகர பிரமுகா் மாரியம்மாள் நிறைவு உரையாற்றினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT