திருநெல்வேலி

நான்குனேரியில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை

9th Aug 2022 02:43 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் சட்டம்-ஒழுங்கு நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நான்குனேரி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் காவல் நிலையத்துக்கு உள்பட்ட நான்குனேரி, தெற்கு நான்குனேரி, மறுகால்குறிச்சி, இறைப்புவாரி, சிங்கனேரி, உன்னங்குளம் உள்ளிட்ட ஊராட்சி மன்றப் பகுதிகளில் சட்டம்- ஒழுங்கைக் கடைப்பிடிப்பது, நடைமுறைகளைப் பராமரிப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

ஆய்வாளா் செல்வி தலைமை வகித்தாா். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா். நான்குனேரி பகுதியில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒத்துழைக்க வேண்டும். காவல் துறையினருடன் தொடா்பிலிருந்து மக்களின் பாதுகாப்புக்கும், குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் உறுதுணையாக இருக்கவேண்டும் என, ஆய்வாளா் வலியுறுத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT