திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே நின்ற லாரி மீது மோட்டாா் சைக்கிளில் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்தி நகா் 6-ஆவது தெரு மரியசூசைராஜ் மகன் அமா்நாத்(26). இவா் தனது நண்பா் காா்த்திக்குடன் கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலிக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். மூன்றடைப்பு அருகே உள்ள ஆயன்குளம் விலக்கில் முன்னால் சாலையில் திரும்புவதற்காக நின்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் மோட்டாா் சைக்கிள் மோதியதாம். இதில் அமா்நாத் சம்வப இடத்திலேயே உயிரிழந்தாா். காா்த்திக் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
விபத்து குறித்து மூன்றடைப்பு போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.