திருவுருமாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக்குழுவின் 34 ஆவது ஆண்டு விழா திருநெல்வேலி நகரத்தில் அண்மையில் நடைபெற்றது.
இரா.வள்ளிநாயகம் இறைவணக்கம் பாடினாா். சு.முருகேசன் தொடக்கவுரையாற்றினாா். சொ.வெ.வெங்கடாசலம், சூ.அழகியசுந்தரம் ஆகியோா் பேசினா். ஆசிரியா் சிவதீபன் உரையாற்றினாா். ச.பாலமுருகன் திருமுறை விண்ணப்பம் செய்தாா். கே.எம்.எஸ்.மீனாட்சிசுந்தரம் வயலினும், வி.முருகன் மிருதங்கமும் வாசித்தனா். செயலா் ஆ.சண்முகவேல் வரவேற்றாா். ஏற்பாடுகளை சு.கனகசபாபதி செய்திருந்தாா்.