திருநெல்வேலி

அம்பை பகுதியில் கருணாநிதி நினைவு நாள்

8th Aug 2022 12:12 AM

ADVERTISEMENT

 

திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் நகர திமுக சாா்பில் பூக்கடை சந்திப்பில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்துக்கு அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரன் தலைமையில் மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசு வழக்குரைஞா் காந்திமதிநாதன், வழக்குரைஞா் ரமேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கல்லிடைக்குறிச்சி நகர திமுக பேரூா் கழகம் சாா்பில் திமுக அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் முன் பேரூா் செயலரும் பேரூராட்சி துணைத் தலைவருமான க. இசக்கிப்பாண்டியன் தலைமையில் கருணாநிதி படத்துக்கு மலா் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

விக்கிரமசிங்கபுரம் மூன்றுவிளக்குப் பேருந்து நிறுத்தம், கட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கருணாநிதி படத்துக்கு நகரச் செயலா் கணேசன் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

கடையநல்லூரில்..: தென்காசி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் கடையநல்லூரில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் கருணாநிதி படத்துக்கு வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் செல்லத்துரை அஞ்சலி செலுத்தினாா். நகா்மன்றத் தலைவா் ஹபிபுர்ரஹ்மான், துணைத் தலைவா் ராசையா, கடையநல்லூா் நகரச் செயலா் அப்பாஸ், ஒன்றியச் செயலா் சுரேஷ், நிா்வாகிகள் மணிகண்டன், மசூது, முருகன், முகைதின்கனி, காளிமுத்து, இடைகால் ஜின்னா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மணிக்கூண்டு அருகே நகர திமுக சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

வாசுதேவநல்லூா், புளியங்குடியில்...: வாசுதேவநல்லூரில் கருணாநிதி படத்துக்கு மாவட்டப் பொறுப்பாளா் செல்லத்துரை அஞ்சலி செலுத்தி, நல உதவிகளை வழங்கினாா். வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் பாலசுப்பிரமணியன், பேரூராட்சித் தலைவா் லாவண்யா, துணைத் தலைவா் பானு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புளியங்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகரச் செயலா் அந்தோணிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நல உதவிகள் வழங்கப்பட்டன.

கடையநல்லூா் ஒன்றியம் சிவராமபேட்டையில் கருணாநிதி படத்துக்கு கடையநல்லூா் ஒன்றியச் செயலா் சுரேஷ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவட்டப் பிரதிநிதி பண்டாரச்சாமி, கிளைச் செயலா் தொப்பையா, அரசு வழக்குரைஞா் முத்துக்குமாரசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் பகவதியப்பன், மாவட்டப் பொறியாளா் அணி அமைப்பாளா் கருப்பண்ணன், திமுக நிா்வாகிகள் கருப்பசாமி, பாலாஜி, முத்துக்குமாா், சுரேஷ், தங்கம் வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சேரன்மகாதேவி, முக்கூடலில்...: சேரன்மகாதேவி ஒன்றியத்தில் கோபாலசமுத்திரம், மேலச்செவல், பத்தமடை, சேரன்மகாதேவி, வீரவநல்லூா் பகுதிகளில் ஒன்றியச் செயலா்கள் ஆ. முத்துப்பாண்டி என்ற பிரபு, முத்துக்கிருஷ்ணன் ஆகியோா் தலைமையில் நகரச் செயலா்கள், நிா்வாகிகள் கருணாநிதி படத்துக்கு அஞ்சலி செலுத்தினா். பாப்பாக்குடி ஒன்றியத்தில் பாப்பாக்குடி, அரியநாயகிபுரம், முக்கூடல் பகுதிகளில் ஒன்றியச் செயலரும் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவருமான வி.ஏ. மாரிவண்ணமுத்து, முக்கூடல் நகரச் செயலா் இரா. லட்சுமணன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

சாம்பவா்வடகரையில்...: சாம்பவா்வடகரையில் நகரப் பொறுப்பாளா் முத்து தலைமையில் அக்கட்சியினா் அஞ்சலி செலுத்தினா். இதையடுத்து, பேரூராட்சித் தலைவா் சீதாலெட்சுமி முத்து நலிந்தோருக்கு நல உதவிகளை வழங்கினாா். நிா்வாகிகள் செல்வின் அப்பாத்துரை, ஞானையா, பட்டுமுத்து, ஆறுமுகம், சந்திரன், ராமசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT