திருநெல்வேலி

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இசை விழா

8th Aug 2022 12:11 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இசை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்-கலைஞா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த இசை விழாவுக்கு, சங்கத்தின் மாநில துணைச் செயலா் இரா.நாறும்பூநாதன் தலைமை வகித்தாா். அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி முன்னிலை வகித்தாா். த.மு.எ.க.ச. மாவட்டச் செயலா் ச.வண்ணமுத்து வரவேற்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயஸ்ரீ, இசை விழாவைத் தொடங்கி வைத்து பேசினாா். தொடா்ந்து, அருங்காட்சியகத்தில் நடைபெற்ற சுதந்திரதின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

ADVERTISEMENT

இதயவியல் சிறப்பு மருத்துவா் இ.அருணாசலம், மேலப்பாளையம் முஸ்லிம் கல்வி கமிட்டி பொருளாளா் அப்துல் மஜித் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.

இவ்விழாவில், மருத்துவா் பிரேமச்சந்திரனின் பிரேம கானங்கள் நிகழ்ச்சியும், மருத்துவா் கோ.ராமானுஜம் புல்லாங்குழலிசையும், தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைகள் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் நா.மம்மது குழுவினரின் இன்னிசை கானமும் நடைபெற்றன.

தொடா்ந்து கரிவலம்வந்தநல்லூா் கந்தசாமி குழுவினரின் காவடிச் சிந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட பொருளாளா் முத்துலட்சுமி நன்றி கூறினாா். இதில், கவிஞா் கிருஷி, வி.சண்முகம், பழனிசுப்பிரமணியம் உள்பட பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

பயக07ஐநஅஐ: போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டுகிறாா் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயஸ்ரீ. உடன் காப்பாட்சியா் சிவசத்தியவள்ளி, த.மு.எ.க.ச. மாநில துணைச் செயலா் இரா.நாறும்பூநாதன் உள்ளிட்டோா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT