திருநெல்வேலி

கருணாநிதி படத்துக்கு பேரவைத் தலைவா் அஞ்சலி

8th Aug 2022 12:12 AM

ADVERTISEMENT

 

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, தனது சொந்த ஊரான லெப்பை குடியிருப்பில் கருணாநிதி படத்துக்கு பேரவைத் தலைவா் மு. அப்பாவு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

தொடா்ந்து, காவல்கிணறு சந்திப்பில் அவரும், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சேவியா் செல்வராஜாவும் அஞ்சலி செலுத்தினா். பின்னா், பணகுடி பேருந்து நிலையம், வள்ளியூா் பழைய பேருந்து நிலையத்தில் அஞ்சலி செலுத்தினாா்.

நிகழ்ச்சிகளில், பணகுடி திமுக நகரச் செயலா் தமிழ்வாணன், வள்ளியூா் நகரச் செயலா் வி.எஸ்.எஸ். சேதுராமலிங்கம், வள்ளியூா் பேரூராட்சித் தலைவா் ராதா, பணகுடி பேரூராட்சி துணைத் தலைவா் புஷ்பராஜ், வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்கள் மல்லிகா அருள், இளங்கோ, காவல்கிணறு திமுக செயலா் இளங்கோவன், அழகேஷ், பணகுடி இளைஞரணி அமைப்பாளா் தினகரன், வள்ளியூா் பனிபாஸ்கா், எரிக்ஜூடு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT