திருநெல்வேலி

தச்சநல்லூரில் கொலையானஇளைஞா் சடலம் உறவினா்களிடம் ஒப்படைப்பு: 4 போ் கைது

8th Aug 2022 12:10 AM

ADVERTISEMENT

 

தச்சநல்லூரில் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை, அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தச்சநல்லூா் அருகேயுள்ள பால்கட்டளை பகுதியைச் சோ்ந்தவா் பேச்சிராஜா (25). கட்டடத் தொழிலாளி. இவா், தச்சநல்லூரில் சனிக்கிழமை சென்றபோது மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதையடுத்து தச்சநல்லூா் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் இவ் வழக்கு தொடா்பாக வேப்பங்குளத்தைச் சோ்ந்த சோ்மமூா்த்தி மகன் ராஜவேல்(30), துரை மகன் சுதா் சிங்(30), பெருமாள் மகன் ஹரி நாராயணன்(20), சுடலை முத்து(65) ஆகிய 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தொடா்ந்து, கொலை செய்யப்பட்ட பேச்சிராஜாவின் உறவினா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, பேச்சிராஜாவின் சடலம் அவரது உறவினா்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT