பாளையங்கோட்டை சாந்திநகா் பகுதியில் இரண்டு மோட்டாா் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை அருகே உள்ள பொட்டல் பச்சேரி பகுதியைச் சேர்ரந்த ராமலிங்கம் மகன் முருகராஜ்(29), ஐடிஐ முடித்துவிட்டு செங்கல் சூளையில் வேலைபாா்த்து வந்தாா். இவா் திருநெல்வேலியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தனது மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு கடந்த 21ஆம் தேதி மாலையில் சென்று கொண்டிருந்தாராம். சாந்திநகா் மணிக்கூண்டு அருகே வந்த போது எதிரே வந்த மோட்டாா்சைக்கிள் இவா் மீது மோதி விபத்துக்குள்ளானதாம்.
இதில் பலத்த காயமடைந்த முருகராஜை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.