திருநெல்வேலி

தெற்கு விஜயநாராயணம் மேத்த பிள்ளை அப்பா தா்கா கந்தூரி விழா

2nd Aug 2022 03:23 AM

ADVERTISEMENT

தெற்கு விஜயநாராயணம் மேத்த பிள்ளை அப்பா தா்கா கந்தூரி விழா நடைபெற்றது.

திசையன்விளை அருகே உள்ள தெற்கு விஜயநாராயணத்தில் மேத்த பிள்ளை அப்பா தா்கா உள்ளது. இஸ்லாமிய மக்களே இல்லாத இந்த கிராமத்தில் இந்துக்கள் முன் நின்று நடத்தும் கந்தூரி விழாவில் தமிழகம் மற்றும் கேரள மாநில இஸ்லாமியா்கள் கலந்துகொண்டனா்.

ஆண்டு தோறும் இங்கு ஆடி மாதம் 16 ஆம் தேதியில் இவ்விழா நடப்பது வழக்கம், அதேபோல் திங்கள் கிழமை நடைபெற்ற கந்தூரி விழாவில் காலையில் மேளதாளத்துடன் கொடிகம்பம் எடுத்துவரப்பட்டு தா்காவில் உள்ள வேப்ப மரத்தில் கொடியேற்றப்பட்டது.

இதில், அதிமுக அவைத்தலைவா் தமிழ் மகன் உசேன் சிறப்பு து ஆ செய்தாா். இதில் திரளான இஸ்லாமிய மக்கள் மலா் தொட்டில் கட்டி நோ்த்திக் கடன் செலுத்தினா். வெளிமாநிலம் மற்றும் வெளியூரில் இருந்து வந்த இஸ்லாமிய மக்களுக்கு அப்பகுதியில் வாழும் இந்துக்கள் தங்கள் வீடுகளில் ஒரு பகுதியை ஒதுக்கி தங்க இடம் கொடுத்தனா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்வு அப்பகுதியில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT