திருநெல்வேலி

ஆட்சியா் அலுவலகம் முன்பு சிஐடியூ ஆா்ப்பாட்டம்

2nd Aug 2022 03:21 AM

ADVERTISEMENT

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கூலியை உயா்த்தக் கோரி சிஐடியூ சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு கூலியாக ரூ. 600 வழங்க வேண்டும். இத்திட்டத்தை நகா்ப்புறங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சிஐடியூ சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் மாயகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் மோகன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தாா். மாவட்டப் பொருளாளா் பெருமாள், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் செல்லத்துரை, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் மாலதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வீடில்லாத அனைவருக்கும் வீட்டுமனை ஒதுக்கி ரூ.10 லட்சத்தில் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும். விலை உயா்வு, வேலையின்மையை கருத்தில் கொண்டு விவசாயத் தொழிலாளா்களுக்கு கூலியை உயா்த்திக் கொடுக்க வேண்டும். வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தி வன மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT