திருநெல்வேலி

மானூா் அருகே ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி வீட்டில் திருட்டு

29th Apr 2022 12:38 AM

ADVERTISEMENT

மானூா் அருகே ஓய்வுபெற்ற வேளாண் துறை அதிகாரி வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மானூா் அருகே உள்ள ராமையன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன்(72). இவா் கடந்த இரு தினங்களுக்கு முன்னா், தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்றிருந்தாா்.

இந்நிலையில், அவரது மகன் சுந்தரம் புதன்கிழமை வீட்டுக்கு வந்தபோது, கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், பீரோவில் இருந்த ரூ.65 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்தனவாம். இதுகுறித்த புகாரின்பேரில், மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT