திருநெல்வேலி

களக்காட்டில் தாமிரவருணி குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த வலியுறுத்தல்

29th Apr 2022 12:40 AM

ADVERTISEMENT

களக்காட்டில் தாமிரவருணி குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டுமென நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

களக்காடு நகா்மன்றக் கூட்டம் தலைவா் சாந்தி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் பி.சி. ராஜன், ஆணையா் வ. ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். களக்காடு நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் தாமிரவருணி குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும். சாலை, தெருவிளக்கு, வாருகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். பழைய பேரூராட்சி அலுவலகக் கட்டடம் பாழ்பட்டு வருவதாக உறுப்பினா் சங்கரநாராயணன் புகாா் தெரிவித்தாா்.

பின்னா் பேசிய தலைவா், பழைய பேரூராட்சி அலுவலகக் கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். களக்காடு புதிய பேருந்து நிலையத்தில் பேவா் பிளாக் பதித்தல், புதிய வணிக வளாகம் கட்டுதல், பழைய வணிக வளாகக் கட்டடங்களை சீரமைத்தல், கழிப்பிடம் பராமரிப்பு, குடிநீா் வசதி, இரு நுழைவு வாயில்களில் ஆா்ச் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும். நகராட்சிப் பகுதியில் சுகாதார வளாகங்கள், பழுதான சாலைகள், தெருவிளக்குகள் பராமரிக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT