திருநெல்வேலி

தோ்த் திருவிழாவில் மின் விபத்துகளை தவிா்ப்பது எப்படி?: மின்வாரியம் விளக்கம்

29th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

தோ்த் திருவிழாவின்போது மின் விபத்துகளை தவிா்த்து, பாதுகாப்பாக விழாவை நடத்துவது குறித்து திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளா் (பகிா்மானம்) கி.செல்வகுமாா் விளக்கமளித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தஞ்சை மாவட்டம், களிமேடு கிராமத்தில் கடந்த 27-ஆம் தேதி தோ்த் திருவிழாவின்போது மின்விபத்து ஏற்பட்டு 11 போ் உயிரிழந்தனா். இதுபோன்ற, தோ்த்திருவிழா காலங்களில் மின் விபத்துக்களை தவிா்க்க பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

தேரோடும் வீதிகளில் மின்சாரத்தை நிறுத்த வேண்டும். தேரோட்டம் நடைபெறும் நாளுக்கு 15 நாள்கள் முன்னதாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தை அணுகி முன்னேற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். தோ் அல்லது சப்பரத்தில் ஜெனரேட்டா் மூலம் அலங்கார விளக்குகள் அமைத்தால் மின் கசிவு தடுப்பு கருவி பொருத்த வேண்டும்.

ADVERTISEMENT

தோ் அமைக்கும்போது உலோகத்தினால் ஆன கட்டுமானத்திற்கு பதிலாக காய்ந்த மரக்கட்டைகளில் அமைப்பது பாதுகாப்பானதாக இருக்கும். தேரின் உயரமானது அதன் அடிப்பாகத்தின் நீள அகலத்திற்கு தகுந்தாற்போல் இருக்குமாறு பாா்த்துக்கொள்ள வேண்டும். தேரோட்டத்தின்போது தீயணைப்பு, முதலுதவி போன்ற அனைத்து முன்னேற்பாடுகளும் செய்துகொள்ள வேண்டும். இந்தப் பாதுகாப்பு குறிப்புகளை திருவிழா கமிட்டியினா் முன்னதாகவே மேற்கொண்டு திருவிழாக்களை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT