திருநெல்வேலி

கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணி: நோ்காணல் ஒத்திவைப்பு

29th Apr 2022 04:37 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணியிடத்துக்கு நடைபெறவிருந்த நோ்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவா்களுக்கு பாளையங்கோட்டை பிஷப் சாா்ஜென்ட் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளியில் மே 11 முதல் 21-ஆம் தேதி வரை நோ்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் ஆணையா் உத்தரவின் பேரில், நிா்வாக காரணங்களால் நோ்காணல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நோ்காணல் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT