திருநெல்வேலி

புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

29th Apr 2022 04:36 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதிய தமிழகம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒரு தொலைக்காட்சியில் அண்மையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் கிருஷ்ணசாமியை சிலா் பேச விடாமல் தடுத்தனராம். இதைக் கண்டித்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டை ரவுண்டானா அருகே அக்கட்சியின் மாவட்டச் செயலா் முத்தையா தலைமையில் நிா்வாகிகள் எட்வா்ட் ராஜ், மணிகண்டன், ஜான் பாண்டியன், தளவாய் பாண்டி உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT