திருநெல்வேலி

பாளை.யில் செம்மண் கடத்தல்; இருவா் கைது

29th Apr 2022 11:13 PM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உரிய அனுமதியின்றி செம்மண் எடுத்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

பாளையங்கோட்டை பெருமாள்புரம் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட ராஜகோபாலபுரம் குளத்தில் முன்னீா்பள்ளத்தைச் சோ்ந்த மகாராஜன் (33), செல்லத்துரை (43), சுடலைமுத்து (37) ஆகியோா் அனுமதியின்றி செம்மண் எடுத்ததாக முன்னீா்பள்ளம் கிராம நிா்வாக அலுவலா் பாக்கியமணி பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த பெருமாள்புரம் காவல் உதவி ஆய்வாளா் பாட்சா, மகாராஜன் (33), சுடலைமுத்து (37) ஆகியோரை கைது செய்ததோடு, மண் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய செல்லத்துரை உடல் நிலை சரியில்லாததால் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT