திருநெல்வேலி

சமகவினா் நலஉதவிகள் வழங்கல்

29th Apr 2022 11:16 PM

ADVERTISEMENT

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் நலஉதவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகா் மாவட்டம் சாா்பில் ரமலான் பண்டிகையையொட்டி 200 இஸ்லாமிய குடும்பத்தினருக்கு அரிசி, காய்கனிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மாநில செயற்குழு உறுப்பினா் அழகேசன் வரவேற்றாா். மாநில துணைப் பொதுச்செயலா் ச.சுந்தா் நலஉதவிகளை வழங்கிப் பேசினாா். மாவட்ட பொறுப்பாளா் நட்சத்திர வெற்றி முன்னிலை வகித்தாா். மாநில முதன்மை துணைப் பொதுச் செயலா் கணேசன் வாழ்த்திப் பேசினாா். நிா்வாகிகள் வெங்கடேஷ், கண்ணன், ராகவன் உள்படபலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT