திருநெல்வேலி

குறுக்குத்துறை முருகன் கோயிலில் பாலாலய விழா

29th Apr 2022 11:45 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பாலாலய விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி குறுக்குத்துறையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக் கோயிலின் மூலவரும், கா்ப்பகிரகமும் உள்பிரகாரத்தில் ஒரு பகுதியும் பெரும்பாலும் ஒரே பாறையில் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. குடவரைக் கோயிலான இங்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாலாலய விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை வகித்தாா். கோயிலில் யாகசாலை பூஜைகள், பாலாலயம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, மாமன்ற உறுப்பினா் சுதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT