திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள்கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

24th Apr 2022 05:41 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி சந்திப்பு மேல வீரராகவபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவத்தையொட்டி 2 ஆண்டுகளுக்குப் பின் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பு மேல வீரராகவபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை பிரமோற்சவ திருவிழா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தேரோட்டத்தை முன்னிட்டு கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னா் கேடயத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினாா். அதைத்தொடா்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT