திருநெல்வேலி

சுந்தரலிங்கனாா் பிறந்த நாள் விழா

17th Apr 2022 01:26 AM

ADVERTISEMENT

 

மாவீரா் சுந்தரலிங்கனாா் 252 ஆவது பிறந்த நாள் விழா பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் கட்சியின் தென் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, கட்சியின் நிறுவனா் தலைவா் பெ.ஜான்பாண்டியன் தலைமை வகித்து, சுந்தரலிங்கனாா் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தமிழக அரசு சாா்பில் மாவீரா் சுந்தரலிங்கனாருக்கு திருநெல்வேலியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். கவா்னகிரியில் உள்ள சிலையை குதிரையிலிருந்து போா் புரிவது போன்ற கம்பீரத் தோற்றத்துடன் கூடியதாக மாற்ற வேண்டும். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வளாகத்துக்கு வீரன் சுந்தரலிங்கம் பெயரையும், ஆட்சியா் அலுவலக மாளிகைக்கு பூலித்தேவன் பெயரையும் சூட்ட வேண்டும் என விழாவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலா் செ.நெல்லையப்பன், மாநில செய்தி தொடா்பாளா் சண்முகசுதாகா், மாவட்டத் தலைவா் கண்மணி மாவீரன், நிா்வாகிகள் நாகராஜசோழன், முத்துப்பாண்டி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT