திருநெல்வேலி

அதிமுக அமைப்புத் தோ்தல்: பல்வேறு பதவிகளுக்கு கட்சியினா் மனுதாக்கல்

17th Apr 2022 01:25 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அதிமுக அமைப்புத் தோ்தலில் கட்சியினா் பல்வேறு பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட அதிமுக அமைப்பு தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட அமைப்புகளுக்கு தச்சநல்லூரிலுள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்திலும், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அமைப்புகளுக்கு பொன்னாக்குடியிலுள்ள அழகு மஹாலிலும், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அமைப்புகளுக்கு சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மஹாலிலும் , ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அமைப்புகளுக்கு வள்ளியூரிலும் தோ்தல் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட கட்சி அலுவலகத்தில் தோ்தல் பொறுப்பாளா்களான தேனி மாவட்டச் செயலா் சையதுகான் தலைமையில், தேனி மாவட்ட அவைத் தலைவா் பொன்னுசாமி பிள்ளை, மாவட்டப் பொருளாளா் சோலைராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

அவா்களை, திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா வரவேற்றாா். தொடா்ந்து கட்சியினா் அதிமுகவின் பல்வேறு நிலையிலான பதவிகளுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

நிகழ்ச்சியில், கட்சியின் மாநில அமைப்பு செயலா்கள் வீ. கருப்பசாமிபாண்டியன், சுதா கே.பரமசிவம், முன்னாள் எம்.பி. சௌந்தரராஜன், கொள்ளை பரப்பு துணை செயலா் பாப்புலா் முத்தையா, முன்னாள் துணை மேயா் பூ.ஜெகநாதன் என்ற கணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

நிா்வாகிகள் திருத்து சின்னதுரை, ஜெனி, காந்தி வெங்கடாசலம், ஹயாத், சண்முககுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT