வைணவ தலங்களில் ஒன்றான திருநெல்வேலி சந்திப்பு வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு பெருமாள், தாயாா்களுக்கு சிறப்பு திருமஞ்னம் நடைபெற்றது.
பின்னா் கொடிப் பட்டம் வெள்ளி பல்லக்கில் நான்கு ரதவீதிகளிலும் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி மூலவா் வீரராகவ பெருமாள் மற்றும் தாயாா்கள், ஸ்ரீதேவி, பூதேவி, உற்சவா் வரதராஜ பெருமாள், தாயாா்கள் ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
விழா தொடா்ந்து 11 நாள்கள் நடைபெறவுள்ளது. 19ஆம் தேதி கருட சேவையும், 24ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறவுள்ளது.