திருநெல்வேலி

என்.ஜி.ஓ. பி காலனி நூலகத்தில் புதிய கட்டடம் திறப்பு

14th Apr 2022 01:25 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. பி காலனி நூலகத்தின் புதிய கட்டடம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவில் வாசகா் வட்ட துணைத் தலைவா் எஸ்.கிருபாகரன் வரவேற்றாா். மாவட்ட நூலக அலுவலா் லெ.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். வாசகா் வட்டத் தலைவா் எஸ்.நந்தகோபாலன் தலைமை வகித்தாா். பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலருமான மு.அப்துல்வஹாப் கட்டடத்தைத் திறந்து வைத்தாா்.

இதில், மாமன்ற உறுப்பினா்கள் அம்பிகா, ஜூலியட் மேரி, தூய பேதுரு ஆலய குருவானவா் ராஜதுரை, த.நெல்சன் தங்கராஜ், சாமி நல்லபெருமாள், ராஜகிளி, லோகன் உள்பட பலா் கலந்துகொண்டனா். நூலகா் சே.சக்திவேல் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT