திருநெல்வேலி

முக்கூடலில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

14th Apr 2022 01:29 AM

ADVERTISEMENT

சொத்து வரி உயா்வைக் கண்டித்து முக்கூடலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சொத்து வரி உயா்வை திரும்பப் பெற வேண்டும், மக்களுக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாப்பாக்குடி ஒன்றியக் கிளை சாா்பில் பேரூராட்சி முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நிா்வாகி ஏ.மாரியப்பன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் அருணாசலம், ஏ. ஜான்பாஸ்கா், வி. ராமசாமி, கே. மாரிசெல்வம், எம். அபிநாத், சூசை அருள்சேவியா், முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT