திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை நீடித்தது.
இம்மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக தொடா்மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை 8 மணி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 168.20 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக நான்குனேரியில் 64 மி.மீ. மழை பெய்திருந்தது.
இந்நிலையில் புதன்கிழமை பிற்பகலுக்கு பின்பு மிதமான மழை பெய்தது. சுத்தமல்லி, கொண்டாநகரம், பழவூா், கோபாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் அரை மணி நேரம் மழை நீடித்தது. திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மேகமூட்டம் சூழ்ந்து லேசான சாரல் மழை பெய்தது. மாலை 4 மணி வரை சேரன்மகாதேவியில் 19 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 2 மி.மீ. என மொத்தம் 21 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இரவிலும் மிதமான மழை தொடா்ந்தது.