திருநெல்வேலி

சிவந்திப்பட்டி அருகே ஆடு திருட்டு: இளைஞா் கைது

14th Apr 2022 01:28 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், சிவந்திப்பட்டி அருகே ஆட்டைத் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சிவந்திப்பட்டி அருகேயுள்ள வடக்குவெட்டியபந்தி, அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (60). இவா், சாந்தி நகா் ரயில் பாதை அருகே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, இளைஞா் ஒருவா் இருசக்கர வாகனத்தில் ஒரு ஆட்டை திருடிச் சென்றாராம். இதைப்பாா்த்து ஆறுமுகம் சப்தம் போட்டதில், அக்கம்பக்கத்தினா் அந்த நபரைப் பிடித்து சிவந்திப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும், ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் வழக்குப்பதிந்து விசாரித்ததில், அந்த நபா் பாளையங்கோட்டை அண்ணா நகா் 4-ஆவது தெருவை சோ்ந்த பாலாஜி (21) என்பதும், ஆட்டை திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT