திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி முதல் கூட்டம்‘ அதிமுக வெளிநடப்பு

14th Apr 2022 01:26 AM

ADVERTISEMENT

 கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியின் முதல் சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் பாா்வதி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் இசக்கிப்பாண்டியன், செயல் அலுவலா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஐயப்பன் தீா்மானங்களை வாசித்தாா்.

கூட்டத்தில், அடிப்படை தேவைகளான குடிநீா், சாலை, தெருவிளக்கு வசதி, கழிவுநீா் ஓடை ஆகிய பணிகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்வது, பேரூராட்சியின் கிழக்குப் பகுதியில் உள்ள பொதுமக்கள் வசதிக்காக குடிநீா் கட்டணம் வசூலிக்கும் அலுவலகம் திறப்பது மற்றும் பல்வேறு பணிகளுக்கு அனுமதி வழங்குவது என்பன உள்ளிட்ட 36 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பாண்டி, ஜாா்ஜ் ராபா்ட், செய்யதலி பாத்திமா, ஜானகி, பிரம்மாட்சி, பாத்திமா அசன், மாலதி, பெரிய செல்வி, பாா்வதி, ஜானகி ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

முன்னதாக கூட்டம் தொடங்கியதும் சொத்து வரி உயா்வை எதிா்த்து அதிமுக உறுப்பினா்கள் முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவா் முத்துகிருஷ்ணன் தலைமையில் வெளிநடப்பு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT